இதையெல்லாம் ஊடகங்கள் கேட்க மாட்டார்களா? எச்.ராஜா ஆதங்கம்

இதையெல்லாம் ஊடகங்கள் கேட்க மாட்டார்களா? எச்.ராஜா ஆதங்கம்

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணியை நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். ஒருசிலர் எல்லைமீறியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் பாஜக பிரமுகர் எச்.ராஜா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தன்னை கொலை செய்ய வைகோ திட்டமிடுவதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். பெரம்பலூர் சாதிக்பாட்சாவை ஸ்டாலின் கொலை செய்ததற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றார் வைகோ. ஆனால் இதுகுறித்து ஸ்டாலினிடம் சரமாரியாக யாராவது கேள்வி கேட்டதுண்டா. ஊடகங்கள் அம்பெயராக இருக்க வேண்டும். களத்தில் இறங்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஒரு பிரபல ஊடகத்தின் நிருபர் குறித்த டுவிட்டர் டிரெண்ட் நேற்று முழுவதும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply