இது மிரண்ட கூட்டணி, திரண்ட கூட்டணி: தமிழிசை

அதிமுக கூட்டணி மிரட்டப்பட்ட கூட்டணி என்றும், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் மிரட்டலால் உண்டான கூட்டணி என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்த நிலையில் அவருக்கு பதிலடி தரும் வகையில் அதிமுக கூட்டணி மிரண்ட கூட்டணி அல்ல, திரண்ட கூட்டணி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளர்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி, ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தமிழிசை சௌந்திரராஜன் பாஜகவின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர் பேசிய அவர், தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் தூத்துகுடி தொகுதியில் தமிழிசை போட்டியிடுவார் என தெரிகிறது. இதே தொகுதியில்தான் கனிமொழி, ராதிகா ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply