இது நயன்தாராவின் ஆண்டா? ஆறு படங்கள் ரிலீஸ் செய்ய திட்டம்

இது நயன்தாராவின் ஆண்டா? ஆறு படங்கள் ரிலீஸ் செய்ய திட்டம்

கடந்த ஆண்டு நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு தமிழ்ப்படங்களும், ஜெய்சிம்ஹா என்ற தெலுங்கு படமும் வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த ஆறு படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதி நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாகவுள்ளது. இதனையடுத்து வரும் மார்ச் மாதம் ‘ஐரா’ திரைப்படமும் கோடை விடுமுறையில் ‘கொலையுதிர்க்காலம் படமும் ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் வெளியாகவுள்ளது.

பின் வரும் செப்டம்பர் மாதம் நயன்தாரா நடித்த மலையாள படமான லவ் ஆக்சன் ட்ராமா படமும், தீபாவளி தினத்தில் ‘தளபதி 63’ படமும் வெளியாகும். மேலும் நயன்தாரா நடித்த ‘சயிர நரசிம்ம ரெட்டி’ படமும் இவ்வாண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மொத்தம் இந்த ஆண்டு நயன்தாரா நடித்த ஆறு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply