இது கோர்ட்டா? என்னன்னு நினைச்சிங்க: ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இது கோர்ட்டா? என்னன்னு நினைச்சிங்க: ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கண்டனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ’தர்பார்’ திரைப்படம் நஷ்டம் என ஒரு சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் ஒருசில விநியோகிஸ்தர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் வீடுகளின் முன்பு அவர்கள் போராட்டம் செய்தனர்.

இந்த நிலையில் விநியோகிஸ்தர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் இதனை அடுத்து தனது வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றார் முருகதாஸ் வழக்கு தொடுத்தார்

இந்த வழக்கின் விசாரணை நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது திடீரென ஏஆர் முருகதாஸ் தனது வழக்கை வாபஸ் பெற்றார். இதனை அடுத்து நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என ஏஅர் முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply