இதுதான் விசுவாசம் தல அஜித்தின் கெட்டப்பா?
தல அஜீத் நடக்கும் விசுவாசம் படத்தின் அவரது கெட்டப் குறித்து போட்டோ வைரலாகி வருகிறது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வி வரிசையில், தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரும் 2018 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதையடுத்து, தல அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள், இசையமைப்பாளர் யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அஜித்திற்கான ஹீரோயின்கள் பட்டியலில் தமன்னா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக அஜீத்தின் போட்டோ ஒன்று இன்று வைரலாகி வருகிறது. அதில் அஜீத் கையில் தட்டுடன் சால்ட் அண்டு பெப்பர் லுக் இல்லாமல் இளமையான காட்சி அளிக்கிறார். இது விசுவாசம் படத்துக்கான கெட்டப்பாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.