இதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா?

சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினாலும் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் அதிதீவிரமாக போராடினார்கள். ஒரு சில நாட்களில் இந்தியாவின் மற்ற கல்லூரிகளில் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் வாரக்கணக்கில் ஜே.என்.யூ மாணவர்கள் மட்டும் போராடி வந்தனர்

இந்த நிலையில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் எதற்காக இவ்வளவு தீவிரமாக போராடி வருகின்றனர் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு வந்துள்ள பதிலில் 301 வெளிநாட்டு மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும் அவர்கள் நேபாளம், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது

ஆனால் இதில் 82 மாணவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருப்பது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தால் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் தான் இந்த பல்கலைக்கழக மாணவர்கள் இந்த அளவுக்கு தீவிரமாக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *