இதற்கு பதில் சொல்லுங்கள் முதல்வர் அவர்களே: குஷ்பு டுவிட்

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் எனும் நேற்று தமிழக அரசு அறிவித்தது

டீ கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான கடைகள் திறப்பதற்கு இன்னும் அனுமதிக்காத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன

இந்த நிலையில் இது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பி குஷ்பு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது

டாஸ்மாக் என்பது மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானதா? உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி?? தயவுசெய்து பதில் சொல்லுங்கள் மாண்புமிகு முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களே, என்று பதிவு செய்துள்ளார்.