இடைத்தேர்தல் முடிவால் ஆட்சி மாறுமா?

இடைத்தேர்தல் முடிவால் ஆட்சி மாறுமா?

அதிமுகவுக்கு தற்போது 114 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். இவர்களின் இன்று சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் மரணம் அடைந்துவிட்டதால் 113ஆக குறைந்துள்ளது. மேலும் இதில் கருணாஸ் உள்பட மூவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருவார்களா? என்பது சந்தேகம்தான். எனவே 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இப்போது ஆதரவு உள்ளது. அதிலும் மூன்று எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு மறைமுக ஆதரவு தந்து கொண்டிருப்பதால் அதிமுகவின் பலம் 107 என்றே கணக்கிட வேண்டும்

இந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தது 9தொகுதிகளிலாவது அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். ஏனெனில் 234 தொகுதிகளில் 4 தொகுதிகள் காலி என்பதால் 230 தொகுதிகளில் 116 எம்.எல்.ஏக்கள் பலம் வேண்டும். எனவே 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி தக்க வைக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published.