இடைத்தேர்தல் தோல்வி: கைநழுவி போகிறதா ஸ்டாலின் முதல்வர் கனவு

இடைத்தேர்தல் தோல்வி: கைநழுவி போகிறதா ஸ்டாலின் முதல்வர் கனவு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்த திமுகவால், சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 தொகுதிகளில் வெற்றி பெற முடியாததால் ஸ்டாலினின் முதல்வர் கனவு கலைந்தது

அந்த இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றதால் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இதனால் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் முதல்வர் கனவு கனவாகவே போய் விடுமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த 2 தொகுதி இடைத்தேர்தல் வெறும் தேர்தலாக மட்டுமின்றி அதிமுக மற்றும் திமுக தலைமையின் ஆளுமையையும் கேள்விக்குறி ஆக்குவதாக கூறப்பட்டது

அதிமுக ஆட்சி பினாமி ஆட்சி என்றும் அந்த கட்சியில் ஆளுமை இல்லாத தலைவர்கள் இருப்பதாகவும் திமுக தலைவர் விமர்சனம் செய்தார். அதே போல் திமுக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்காது என்றும் அதிமுக தரப்பினர் கூறினர்.

இந்த இரண்டில் எது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த தேர்தல் முடிவு இருக்கும் என கருதப்பட்டது தற்போது இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதால் ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகுமா? என்று கருதப்படுகிறது

Leave a Reply