இசைஞானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்: பெருமையுடன் பதிவு செய்த சூரி

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து டுவிட் ஒன்றை நடிகர் சூரி பதிவு செய்துள்ளார்.

இந்த டுவிட்டில் நடிகர் சூரி கூறியிருப்பதாவது: இசைஞானி ஐயாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்த தருணம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. கோடிக்கணக்கான ரசிகர்களின் பிணி தீர்க்கும் இசை மருத்துவர் இசையமைக்கும் திரைப்படத்தில் நான் கதைநாயகனாக நடிப்பது என் தாய் தந்தை செய்த புண்ணியம். இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.