இங்கிலாந்து தொடர்: பயிற்சியை தொடங்கிய ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் சமீபத்தில் அதற்கான அணி அறிவிக்கப்பட்டது

இந்த அணி விரைவில் இங்கிலாந்து கிளம்பவுள்ள நிலையில் ஜடேஜா தனது பயிற்சியை துவக்கி உள்ளார்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஜடேஜா சமீபத்தில் தேர்வானார்

கொரோனா பரவல் காரணமாக இவர் வீட்டின் அருகிலேயே பயிற்சியை தொடங்கி உள்ளார் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியபோது வீட்டின் அருகிலேயே தான் பயிற்சியை தொடங்கி இருப்பதாகவும் இங்கிலாந்து பயணத்திற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்