ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த ஒரு போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை நிட்சாவோன் என்பவரை எதிர்கொண்டார். இதில் நிட்சாவோன் 21-19, 21-28 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த சிந்து தொடரில் இருந்து பரிதாபமாக வெறியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply