shadow

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த விருதில் வெளிநாட்டு சிறந்த படம் என்ற பிரிவுக்கு இந்தியாவில் இருந்து 14 திரைப்படங்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது

அதில் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் தேர்வு பெற்றதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது நயன்தாரா தயாரித்த ’கூழாங்கல்’ என்ற திரைப்படமும் தேர்வு பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’கூழாங்கல்’ மற்றும் ’மண்டேலா’ ஆகிய இரண்டு படங்களில் ஒன்று ஆஸ்கார் விருதை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இதுவரை தமிழ் திரைப்படம் உட்பட எந்த இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது இல்லை என்ற நிலையில் இந்த ஆண்டு வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது