ஆள் மாறாட்ட மாணவர் உதித் சூர்யா குடும்பத்தோடு கைது


தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சமீபத்தில் குற்றஞ்சாட்டபட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகாரின் பேரில், கண்டமனூர் விலக்கு காவல்துறையினர், உதித் சூர்யா மற்றும் அவருக்குப் பதிலாக தேர்வு எழுதிய நபர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் உதித் சூர்யா, குடும்பத்துடன் தலைமறைவாகியிருப்பதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இருந்த நிலையில் சற்றுமுன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

உதித் சூர்யா குடும்பத்துடன் திருப்பதியில் தங்கியிருந்ததாகவும் இதுகுறித்த தகவல் அறிந்த தனிப்படை போலீசார் திருப்பதி சென்று அவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது

Leave a Reply