ஆள்மாறாட்டம் விவகாரம்: இர்பான்கானை திருப்பி அனுப்புகிறது மொரிஷியஸ் நாடு!

ஆள்மாறாட்டம் விவகாரம்: இர்பான்கானை திருப்பி அனுப்புகிறது மொரிஷியஸ் நாடு!


நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்ச்சியாக ஒருசில மாணவர்களும் அவர்களுடைய தந்தைகளும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவர் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகினார்.

இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்திருந்த நிலையில் திடீரென அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது

இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் இர்பான் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றுள்ளது தெரிய வந்தது

இந்த நிலையில் மொரீசியஸ் காவல்துறையினருடன் தமிழக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக தர்மபுரி அரசுக் கல்லூரி மாணவனை திருப்பி அனுப்ப மொரிஷீயஸ் நாடு சம்மதம் தெரிவித்துள்ளது

எனவே இர்பான் இன்று அல்லது நாளை தர்மபுரிக்கு திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது அவர் வந்தவுடன் அவருடன் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்

Leave a Reply