ஆளுனர் புகார்: நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு

ஆளுனர் புகார்: நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு

தமிழக ஆளுனர் அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நக்கீரன் கோபால் மட்டுமின்றி அவருடைய பத்திரிகையில் பணிபுரியும் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோபால் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள் நிலையில் ஆளுநர் அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நக்கீரன் பத்திரிகையில் பணிபுரியும் 35 பேர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நக்கீரன் கோபால் போலவே இந்த 35 பேர்களும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்களா? என்பது நாளைய விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply