ஆற்றில் இறங்கினார் அழகர்: மதுரையில் கோலாகலம்

ஆற்றில் இறங்கினார் அழகர்: மதுரையில் கோலாகலம்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சற்றுமுன் நடந்தது. கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பச்சைப்பட்டு உடுத்தி, பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை பிளக்க இன்று காலை சரியாக 5.50 மணியளவில் ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்வை பார்க்க மதுரை மட்டுமின்றி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கியபோது பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர். முன்னதாக வெள்ளைப்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், அழகரை வரவேற்றார்.

Leave a Reply