shadow

ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட்டம்

நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்ட லாபமீட்டும் ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் கூடுதலாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இதில் நான்கு நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவை ஆகும்.

எம்எஸ்டிசி, நீப்கோ, பாரத் டைன மிக்ஸ், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ், மஸகான் டாக் ஷிப்பில்டர்ஸ் மற்றும் மிஸ்ரா தத்து நிகாம் ஆகிய நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியிடுவதற்கு திட்டமிடப்பட் டுள்ளன. ஐபிஓ கொண்டுவருவதற் கான சட்ட ஆலோசகர்கள் மற்றும் மெர்ச்சன்ட் வங்கி நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கப் பட்டிருக்கிறது. இந்த ஆறு நிறு வனங்களிலும் மத்திய அரசு 100% பங்குகளை வைத்திருக்கிறது.

வரும் மே மாதம் 2-ம் தேதிக்குள் மெர்ச்சன்ட் வங்கிகள் தங்களுடைய ஏலத்தொகையை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எம்எஸ்டிசி இது ஒரு மினிரத்னா நிறுவனமாகும். உருக்கு அமைச் சகத்தின் கீழ் இந்த நிறுவனம் செயல்படுகிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.59.88 கோடி. இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.732 கோடி.

மற்றுமொரு மினிரத்னா நிறுவனம் நீப்கோ. (வட கிழக்கு மின் உற்பத்தி நிறுவனம்) மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அனல் மின்நிலையம், நீர்மின் நிலையம் மற்றும் மரபு சாரா எரிசக்தியில் மின் உற்பத்தியை இந்த நிறுவனம் செய்து வருகிறது. வட கிழக்கு மாநிலங்களுக்கு தேவையான மின் உற்பத்தியில் 40 சதவீதம் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 372 கோடி ரூபாய் லாபமீட்டி இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.5,988 கோடி.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 1970-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப் பட்டது. ஏவுகணை மற்றும் பாது காப்பு சாதனங்களை உற்பத்தி செய்கிறது. 2015-16-ம் நிதி ஆண்டில் 563 கோடி லாபமீட்டியது. இதன் மதிப்பு ரூ.1,652 கோடியாகும்.

கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இன்ஜினீயர்ஸ் நிறுவனமும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 1934-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 1960-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டது. போர் கப்பல்கள், கடற்படைக்கு தேவையான பாகங்கள் செய்வது இந்த நிறுவனத்தின் முக்கிய தொழில். 2015-16-ம் நிதி ஆண்டில் லாபம் ரூ.160 கோடியாகவும், மதிப்பு ரூ.1,064 கோடியாகவும் இருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான கப்பல் நிறுவனம் மஸகான் டாக் ஷிப்பில்டர்ஸ். தற்போது மூன்று கப்பல்களையும் ஒரு நீர்மூழ்கி கப்பலையும் கட்டமைத்து வரு கிறது. 1934-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1960-ம் ஆண்டு அரசுடைமை யாக்கப்பட்டது. 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ. 637 கோடி லாபமீட்டி இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.2,846 கோடியாகும்.

மிஸ்ரா தாடு நிகாம் நிறுவனம் உலோகம் மற்றும் உலோக கலவைகளை தயாரித்துவருகிறது. வெளிநாட்டு தேவையை குறைப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.46,500 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

Leave a Reply