ஆறு அறிவு உள்ள மனிதர்கள் ஆறு மொழி படிக்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன்

ஆறு அறிவு உள்ள மனிதர்கள் ஆறு மொழி படிக்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கூறிய ஒரே நாடு ஒரே மொழி இந்தி’ என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளித்து உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி என்பது ஒரு பாடமாக இருக்கும். ஆனால் இந்தியை மற்ற மக்கள் படித்துவிடக்கூடாது என்ற எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது; ஆறு மொழிகள் படித்தாக வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார் என்றும், கூடுதலாக ஒரு மொழியை படிப்பதால் அறிவு வளர்ச்சி அடையும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த பாஜக தமிழக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஏற்படுத்திய தாக்கத்தை விட 100 நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply