ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த காரணத்தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையிலும் நடத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து திமுக தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ‘முன்னரே கூறியிருந்தபடி டிசம்பா் 31ம் தேதிக்குள் ஆா்.கே.நகா் தொகுதியில் இடைத் தோ்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இடைத் தோ்தலை நடத்தி முடிக்கும் வகையில் தோ்தல் பணிகளை தொடங்குமாறு தோ்தல் ஆணையத்திற்கு உயா்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக நடந்த விசாரணையின்போது தோ்தல் ஆணையம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘ஆா்.கே.நகா் தொகுதியில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான போலி வாக்காளா்கள் பெயா்கள், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்

Leave a Reply