ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் அவைத்தலைவர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட 20 பேர் விருப்பமனு கொடுத்திருந்த நிலையில் வேட்பாளர் யார்? என்பதை முடிவெடுக்க முடியாமல் கடந்த சில நாட்களாக அதிமுக தலைமை குழப்பத்தில் இருந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியை மதுசூதனனுக்கு வழங்காவிட்டால் மீண்டும் அதிமுகவில் ஒரு பிளவு ஏற்படும் என்பதை உணர்ந்த முதல்வர் ஈபிஎஸ் இன்று அவரையே வேட்பாளராக அறிவித்துவிட்டார். இதனால் மதுசூதனன் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

திமுக தரப்பில் போட்டியிடும் மருதுகணேஷ், மற்றும் தினகரன் ஆகிய இருவருமே மதுசூதனனுக்கு கடும்போட்டியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவை மதுசூதனனுக்கு சாதகமாக இருப்பதால் மதுசூதனன் வெற்றி பெற்று அமைச்சராவார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply