ஆர்.கே.நகரில் இதுவரையிலான நடவடிக்கைகள் என்ன? தேர்தல் ஆணையம் தகவல்

ஆர்.கே.நகரில் இதுவரையிலான நடவடிக்கைகள் என்ன? தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளன

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் இதுவரை உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.30,79382 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம். அறிவித்துள்ளது. மேலும் இந்த தொகுதியில் அனுமதியின்றி வந்த 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தொடர்பாக வந்த 124 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மேலும் புகார்கள் அதிகம் இருந்தாலும் இந்த முறை தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்றும், வரும் 21ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.