ஆய்வாளரை திட்டிய ஆட்சியர்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அத்திவரதர் வைபவத்தின்போது காவல் ஆய்வாளரை திட்டியது பற்றி பதிலளிக்க ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆட்சியர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச்செயலர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த ஆட்சியரிடம் விஐபி பாஸ் குறித்து ஆய்வாளர் ஒருவர் கேட்டிருக்கின்றார். அதற்கு ஆத்திரம் அடைந்து ஒருமையிலும் நாகரீகம் இன்றியும் ஆய்வாளரை ஆட்சியர் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply