ஆயுதங்கள் வருமுன் அப்புறப்படுத்தப்பட வேண்டும்: எச்.ராஜா டுவீட்

ஆயுதங்கள் வருமுன் அப்புறப்படுத்தப்பட வேண்டும்: எச்.ராஜா டுவீட்

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக சிஐஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இதுவரை மூன்று காவலர்கள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

டெல்லியின் பெரும்பாலான இடங்களில் 144 தடை உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதும் காவல்துறையினர் பெருமளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அரசியல்வாதிகள் ஒரு சிலர் கூறி வரும் கருத்துக்களால் கலவரம் மேலும் தூண்டுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.