ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள்

இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திராயன் இன்று அதிகாலை ஏவ திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது

சந்திரயான்-2 விண்கலத்தில் கடைசி நேரத்தில் எரிபொருள் கசிவு இருப்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதனை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இந்த விண்கலம் நடுவழியில் வெடித்து சிதறி மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கி இருந்திருக்கும். அதுமட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் உழைப்பு அனைத்தும் வீணாகி இருக்கும்

மேலும் இந்தியாவின் ஆயிரம் கோடி ரூபாய் பணமும் வீணாகியிருக்கும்., இவை அனைத்தும் நடக்காமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொழில்நுட்ப கோளறை கண்டுபிடித்து பெரும் விபத்தை தவிர்த்ததோடு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பையும் தவிர்த்துள்ளனர்

இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும் என்பதால் சந்திராயன் விண்ணில் ஏவ இன்னும் ஒருசில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply