shadow

உங்கள் நடிப்பு திறமைக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கின்றது எனவே முரளிதரன் கதாபாத்திரத்தை விட்டுவிடுங்கள் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்

நடிகரும் இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சேரன் விரைவில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த சேரன் உங்களின் வெற்றிக்கு 1000 கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது சகோதரா இதை இந்த படம் பெரிதல்ல விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களை விட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *