shadow

ஆயிரக்கணக்கில் செத்து கரையொதுங்கும் மீன்கள்: சுனாமி அறிகுறியா?

சென்னை அடையாறு முகத்துவாரத்தில் ஆயிரக்கணக்கில் மீன்கள் கரையோரம் செத்து மிதக்கும் சம்பவம் பொதுமக்களிடையே மீண்டும் சுனாமி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சுனாமி வரும் என்ற வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அடையாறு முகத்துவாரத்தில் மீன்கள் கரையோரம் செத்து மிதக்கும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்த போது மீன்கள் செத்து ஒதுங்குவதற்கு முக்கிய காரணமாக கடலில் மாநகர கழிவுகள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், ரசாயன தொழிற்ச்சாலை, இரசாயண பொருட்களை பயன்படுத்தி செய்த சிலைகள் ஆகியவற்றை கொட்டியதால் ஏற்பட்டதன் விளைவே என்று கூறப்படுகிறது. இதேபோல் திருச்செந்தூர் கடல் பகுதியிலும் மீன்கள் செத்து மிதப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply