ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த மிஸ் இந்தியா!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அவருடைய ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததே

தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் ஆம் ஆத்மி கட்சியில் மிஸ் இந்தியா இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

2019 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற மன்ஷி சேகல் என்பவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து உள்ளதாக அக்கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.