ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கர்ப்பிணியான பிரபல நடிகை மரணம்

முழுமாத கர்ப்பிணியாக இருந்த நடிகை ஒருவர் தக்க சமயத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதாபமாக மரணம் அடைந்தார்

மராத்தி மொழி படங்களில் நடித்தவர் பிரபல நடிகை பூஜார். இவருக்கு சமீபத்தில் திருமணமாகி கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென பூஜாவுக்கு பிரசவ வலி வந்ததால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பூஜாவின் உடல்நிலை சீரியஸாக இருந்ததால் உடனே அவரை நவீன வசதிகள் கொண்ட வேறு மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அது அதிகாலை இரண்டு மணி என்பதால் உடனே ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து பூஜைவை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்,. ஆனால் செல்லும் வழியிலேயே பூஜா பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டார். இதனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது

சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்து சில நிமிடங்களுக்கு முன் பூஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரது உயிரும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *