ஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:

வைரலாகும் வீடியோ

ஆந்திராவில் தனது தொகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புதிய ஆம்புலன்சை சிறிது தூரம் ஓட்டிச்சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அவசர காலத்திற்காக 108 என்ற எண் கொண்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். அதன்பின் அவரே ஆம்புலன்சை தானே சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.

ஆம்புலன்சை ரோஜா ஓட்டிச்செல்லும், வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Leave a Reply