ஆபாச படமா, வேண்டவே வேண்டாம்: அலறியடித்து ஓடும் நெட்டிசன்கள்

ஆபாச படமா, வேண்டவே வேண்டாம்: அலறியடித்து ஓடும் நெட்டிசன்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சிறுவர் முதல் முதியோர் வரை அதிகரித்துக்கொண்டே வந்தது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஆபாசப்படம் பார்ப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஒரு சிலர் கைதும் செய்யப்பட்டனர்

போலீசாரின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த ஆபாச பட ரசிகர்கள் ஆபாச படம் பார்ப்பதை விட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரே மாதத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாகவும் கைது நடவடிக்கைக்கு பயந்து மட்டுமன்றி சமூகத்தில் அசிங்கப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்பதாலும், வீட்டில் உள்ளவர்களே குறிப்பாக பெண்களிடம் அசிங்கப்பட வேண்டும் என்பதாலும், பலர் ஆபாச படத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் எதிர்பார்ப்பது இதைத்தான். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று கணித்து இந்த நடவடிக்கை எடுத்தது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்

Leave a Reply

Your email address will not be published.