ஆபாச படத்தை பார்த்தாலே கைதா? அச்சத்தில் ஆபாச பட அபிமானிகள்!

ஆபாச படத்தை பார்த்தாலே கைதா? அச்சத்தில் ஆபாச பட அபிமானிகள்!

குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கணக்கெடுப்பு நடத்தி அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த ஒருவர் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து ஆபாச படங்களை பார்த்தாலே கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற அச்சத்தில் பலர் கடந்த சில நாட்களாக ஆபாச படங்கள் உள்ள இணையதளம் பக்கமே செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த காவல்துறை அதிகாரி ஒருவர் ’தற்செயலாக வரும் மெசேஜில் இருந்து ஆபாச படங்கள் பார்ப்பது பார்ப்பதால் கைது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலும், குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்ந்தாலும் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அதே நேரத்தில் ஆபாச படங்கள் தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இருப்பினும் ஆபாச படங்களை பார்ப்பதற்கு தற்போது பலர் அச்சப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த செய்தி வெளியானால் கைது நடவடிக்கை மட்டுமன்றி தங்களுடைய மானமும் காற்றில் பறக்கும் என்பதால் ஆபாசப்பட அபிமானிகள் பலர் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published.