ஆபரேசன் சக்ஸஸ்’ எச்.ராஜா டுவீட்: ஆபரேசன் ஃபெய்லியர்’ சீமான் டுவீட்

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டவுடன் ’ஆப்பரேஷன் சக்சஸ்’ என்று எச் ராஜா ஒரு ட்வீட்டை பதிவு செய்தார்

இந்த நிலையில் நேற்று நெல்லை கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த செய்தி வெளியான ஒரு சில நிமிடங்களில் நாம் தமிழர் கட்சியின் சீமான் ’ஆப்ரேஷன் சக்ஸஸ்’ என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு ட்வீட்டுக்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றன

Leave a Reply