அதிர்ச்சி தகவல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 10ம் வகுப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆன்-லைனில் படிக்க செல்போன் வாங்கித் தராததால் விபரீத முடிவு என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த 15 வயது மாணவர் தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஆன்லைனில் பாடங்கள் படிக்க செல்போன் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் செல்போன் வாங்க தன்னிடம் பணம் இல்லை என பெற்றோர் கூறியதால் மன விரக்தியில் அந்த மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

Leave a Reply