shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே

இருப்பினும் பல பள்ளிகளில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன இந்த ஆன்லைன் வகுப்புக்கு தேவையான வசதிகள் இல்லை என்றும் செல்போன் இணையதளம் உட்பட வசதிகள் இல்லாததால் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

அதுமட்டுமின்றி ஆன்லைன் பாடங்கள் புரியாமலும் சில மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்

இந்த நிலையில் தற்போது சிவகங்கை அருகே ஆன்லைன் பாடம் புரியவில்லை என்பதால் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *