ஆன்லைன் நண்பர்கள் நடத்திய மது விருந்து: அள்ளிக் கொண்டு சென்ற போலீஸ் படை

ஆன்லைன் நண்பர்கள் நடத்திய மது விருந்து: அள்ளிக் கொண்டு சென்ற போலீஸ் படை

கொடைக்கானல் மலையில் ஆன்லைன் நண்பர்கள் இணைந்து நடத்திய மது விருந்தில் கலந்து கொண்டவர்களை திடீரென சுற்றி வளைத்த போலீஸ் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொடைக்கானல் அருகே குண்டுபட்டி என்ற இடத்தில் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் நண்பர்களாகிய பலர் ஒன்றுகூட முடிவு செய்தனர். இதற்காக மது விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த அழைப்பை ஏற்று சுமார் 250 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. கொடைக்கானல் மலையில் மது விருந்து நடப்பதாக ரகசிய செய்தி கிடைத்தவுடன் உடனடியாக போலீஸ் படை அங்கு சென்று மது விருந்தில் கலந்து கொண்டவர்களை சுற்றிவளைத்து கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிகிறது. இந்த 250 பேர் சேர்ந்து கூடி என்ன பேசினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய மதுபாட்டில்கள் மற்றும் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply