ஆந்திர கவர்னர் என்ற செய்தியில் உண்மையில்லை: சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்

ஆந்திர கவர்னர் என்ற செய்தியில் உண்மையில்லை: சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்

நேற்று தமிழகம், ஆந்திரம் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய மூன்று மாநில கவர்னர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்த நிலையில் நேற்றிரவு திடீரென ஆந்திர மாநில கவர்னராக சுஷ்மா ஸ்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டுவிட்டரில் ஒருசிலர் செய்தி வெளியிட்டனர்

இதனை நம்பி முன்னணி ஊடகங்களும் அடுத்த ஆந்திர கவர்னர் சுஷ்மா தான் என பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் ஆந்திர கவர்னராக நான் நியமைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என்றும், வேறு ஒரு முக்கிய அலுவல் காரணமாக நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களை சந்தித்ததாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply