ஆந்திரா, புதுவை முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கும் பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற இருவருமே பாஜக முதலமைச்சர்கள் இல்லை என்பதும் எதிர்க்கட்சி முதலமைச்சர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் அரசியல் நாகரீகத்தை பிரதமர் மோடி கடை பிடித்து வருவதாகவும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply