ஆந்திராவில் வெகுவிரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து

ஆந்திராவில் வெகுவிரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து

இந்தியாவில் தற்போதுதான் புல்லட் ரயில் திட்டம் குறித்த நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் அதைவிட லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உருவாகவுள்ள ஹைப்பர்லூப் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் தயாராகும் போக்குவரத்து ஊர்தி ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது

புதியதாக உருவாகி வரும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கும் விஜயவாடாவுக்கு உள்ள தூரத்தை வெறும் ஐந்து நிமிடத்தில் கடக்க உதவுவதுதான் இந்த ஹைப்பர்லூப்.

புல்லட் ரயிலைவிட பலமடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஹைப்பர்லூப் வெற்றிடம் கொண்ட குழாய்களில் கேப்சூல் மூலம் இயங்குகிறது. இந்த திட்டம் இப்போதுதான் அமெரிக்காவிலேயே முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

‘இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்தில், 20 நிமிடத்தில் சென்னை டூ பெங்களூரு, 50 நிமிடத்தில் சென்னை டூ மும்பை, சென்னை டூ திருவனந்தபுரம் 40 நிமிடத்தில் சாத்தியம்’ என்கிறது ஹைப்பர் ஒன் நிறுவனம்.

Leave a Reply