ஆதார் அட்டை இணைப்பு குறித்த முக்கிய உத்தரவை இன்று அறிவிக்கின்றது சுப்ரீம் கோர்ட்

ஆதார் அட்டை இணைப்பு குறித்த முக்கிய உத்தரவை இன்று அறிவிக்கின்றது சுப்ரீம் கோர்ட்

ஆதார் அட்டை இல்லையென்றால் இந்திய குடிமகனாக இருக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆதார் அட்டையை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க மத்திய, மாநில அரசுகள் கெடு விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் நேற்று விசாரணைக்கு வந்தது

ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது ‌இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜென்ரல் கே.கே.வேணுகோபால், கட்டாய ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்தார். புதிதாக வங்கி கணக்கு தொடங்கும் போது ஆதார் எண் கட்டாயம் தேவை என்பது தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி முதல் இறுதிகட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.

Leave a Reply