ஆதார் அட்டையால் கண்டுபிடிக்கப்பட்ட 500 தொலைந்த குழந்தைகள்: ஒரு ஆச்சரியமான தகவல்

ஆதார் அட்டையால் கண்டுபிடிக்கப்பட்ட 500 தொலைந்த குழந்தைகள்: ஒரு ஆச்சரியமான தகவல்

மக்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணிகளை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ எண் அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், யு.ஐ.டி.ஏ.ஐ., தலைமை செயல் அதிகாரி, பூஷண் பாண்டே கூறியதாவது: உலகில், அதிகமான குழந்தைகள் உள்ள நாடு

இந்தியா. 120 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை யில், குழந்தைகளின் எண்ணிக்கை, 40சதவீதம். நாட்டில், குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. தினமும், 180குழந்தைகள் காணாமல் போவதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.சிறு வயதில், சகோதரர்கள் பிரிந்து போவதும், பல ஆண்டுகளுக்கு பின், அவர்கள் ஒன்று சேரும் கதைகளை, பல திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அதை, ஆதார் உண்மையாக்கி உள்ளது.

சமீபத்தில், அனாதை இல்லம் ஒன்றில் உள்ள குழந்தைகளுக்கு, ஆதார் அட்டை வழங்குவதற்காக, அவர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஒரு குழந்தைக்கு, ஏற்கனவே விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரிந்தது. அதை வைத்து,அந்த குழந்தை யாரென கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோரிடம் சேர்க்கப்பட்டது. மூன்று மாதங்களில், மாயமான, 500க்கும் அதிக மான குழந்தைகள், ஆதார் மூலம் கண்டுபிடிக்கப் பட்டு, பெற்றோரிடம் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. ஆதார் திட்டத்தால், போலிகள் ஒழிக்கப்பட்டு உள்ளன. பல திட்டங்கள், மானியங்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டால், அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்ச மாகும்.நாடு முழுவதும், 99 சதவீதம் பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply