ஆண்டிப்பட்டியை அடுத்து விருதுநகர் அமமுக அலுவலகத்திலும் பணம் பறிமுதல்

ஆண்டிப்பட்டியை அடுத்து விருதுநகர் அமமுக அலுவலகத்திலும் பணம் பறிமுதல்

நேற்று ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்றும் அமமுக அலுவலகத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விருதுநகர் சாத்தூர் அருகே எதிர்கோட்டை என்ற பகுதியில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் பணப்பட்டுவாடா செய்ய இருந்த ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்க இன்னும் ஒருசில மணி நேரங்களே இருப்பதால் பணப்பட்டுவாடா தமிழகம் முழுவதும் ஜரூராக நடந்து வருவதாக தெரிகிறது

 

Leave a Reply

Your email address will not be published.