ஆட்டோ டிரைவரை கொலை செய்த மூன்று பள்ளி மாணவர்கள்

ஆட்டோ டிரைவரை கொலை செய்த மூன்று பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் மூவர் சரமாரியாக தாக்கியதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தினேஷ்குமார், செல்வம் மற்றும் பரத்வாஜ் ஆகிய மூவர் பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த ஆட்டோ எதிர்பாரதவிதமாக பள்ளி மாணவர்களின் இருசக்கர வாகனம் மோதியதாக தெரிகிறது

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மூவரும் ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

இதனையடுத்து ஆட்டோ டிரைவரின் மனைவி கொடுத்த புகாரை அடுத்து மூன்று மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply