அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆட்சியை முடிவு செய்யும் அணியாக கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணி இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன

சிஓட்டர்ஸ் மற்றும் ஏபிபி எடுத்த கருத்துக் கணிப்பில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு சுமார் 50 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் தேர்தல் நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டாலோ அல்லது மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு வலுவான கூட்டணி ஏற்பட்டாலோ இந்த கருத்துக்கணிப்பில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் தலைமையில் அமமுக உள்பட ஒரு சில கட்சிகள் இணைந்து அந்த கூட்டணி அதிமுக திமுக ஆட்சியை முடிவுசெய்யும் ஒரு கூட்டணியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் கமல்ஹாசனின் பங்கு முக்கிய பங்கு வகித்து வருவதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *