தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி போட்டியிடும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

ஏற்கனவே கமல் கட்சியில் சரத்குமார் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து உள்ள நிலையில் விரைவில் சீமானின் நாம் தமிழர் கட்சி, தினகரனின் அமமுக கட்சி உள்பட ஒருசில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்தால் 50 முதல் 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் அதிமுக அல்லது திமுக எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக கமல் கட்சியின் கூட்டணி இருக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

முதல் முதலாக அதிமுக, திமுகயை ஆட்சியில் அமர்த்தும் ஒரு சக்தியாக கமல் கூட்டணி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply