ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன முன்னேற்பாடு? சென்னை ஐகோர்ட் கேள்வி

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன முன்னேற்பாடு? சென்னை ஐகோர்ட் கேள்வி

2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்களுக்காக நாளை நடைபெற உள்ளது. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று சென்னை ஐகோர்ட் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த கேள்விக்கான விரிவான பதிலை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மதியம் 2.15 மணிக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் என்ன பதிலளிக்கவுள்ளது என்பதை பின்னர் பார்ப்போம்

Leave a Reply