ஆசிரியர்கள் இனி தினமும் பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறைகள் பள்ளிக்கு வந்த மாணவர் சேர்க்கை குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஆசிரியர்களும் தினந்தோறும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்
இந்த உத்தரவை அடுத்து விரைவில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது கருதப்படுகிறது

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்தல், கல்வி தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது