ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு மணி நேரம், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், முன்னுதாரணமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply