ஆசஷ் தொடர்: விக்கெட்டுக்களை குவிக்கும் பந்துவீச்சாளர்கள்

ஆசஷ் தொடர்: விக்கெட்டுக்களை குவிக்கும் பந்துவீச்சாளர்கள்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆசஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது

இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடி இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்களை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.

போட்டி ஆரம்பித்து இரண்டு நாட்கள் கூட முடியாத நிலையில் 23 விக்கெட்டுக்கள் விழுந்துள்ளதால் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply