ஆக்சிஜன் வாங்க ஒரு மாத சம்பளத்தை அப்படியே கொடுத்த எம்.எல்.ஏ!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் எம்எல்ஏ ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குலாப் சந்த் கட்டாரியா என்பவர் தனது ஒரு மாத சம்பளத்தை ஆக்சிஜன் வாங்குவதற்காக கொடுத்துள்ளார். மேலும் அவர் மற்ற எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை இருக்கும் நிலையில் பாஜக எம்எல்ஏவின் இந்த நன்கொடை மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply